இந்திய விண்வெளி ஆய்வு மையம் – இஸ்ரோ, பியெஸ்எல்வி ஏவுகணை மூலம் எக்ஸ்போசாட் (எக்ஸ்ரே போலாரிமீட்டர் சேட்டிலைட்) செயற்கைகோளை விண்ணில் ஏவியது.

 எக்ஸ்கதிர்கள் அலைஅலையாக பயணிக்கக்கூடியவை, அலைபோன்று அசையும் திசையை துருவமுனைப்பு என்கிறோம்.  இத் துருவ முனைப்பை பற்றி செயற்கைகோளில் உள்ள போலாரிமீட்டர் கண்காணித்து தகவல்களை அனுப்பும். எக்ஸ்கதிர்களிலிருந்து வெளிப்படும் விண்பொருட்கள் பற்றிய இன்றியமையாத் தகவல்களையும் சேகரித்து வழங்கும். எக்ஸ் கதிர்களின் தொடக்க மூலங்கள், அதன் நீண்டகால செயல்பாடுகள் பற்றி புரிந்துகொள்ளவும் இத் தகவல்கள் உதவும். இதன் மூலம் பேரண்டத்தைப் பற்றி பல உண்மைகளை நாம் அறிந்துகொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.